ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலானநிலைப்பாடு: அபூபக்கர் அஸ்-சித்தீக்(ரழி)
நமது வாழ்க்கையானது நாம் நமது வாழ்வில் எடுக்கின்ற நிலைப்பாடுகளின் தொகுப்பாகும். அந்த நிலைப்பாடுகள் தான் நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ்(சுபு)விற்கு முன்பு நமது அந்தஸ்தையும் மதிப்பையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. தங்களுடைய வாழ்வில் சிலர் எடுத்த துணிச்சலான நிலைப்பாடுகள் தான் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்ததாகவும், பல நிகழ்வுகளை உருவாக்கியதாகவும் மற்றும் அவர்களைக் கண்டவர்கள் மற்றும் அவர்களைப் பற்றி கேள்விபட்டவர்களுடைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்துள்ளன.