அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு பாராட்டு
بسم الله الرحمن الرحيم
செய்தி:
ஜூலை 24 அன்று, ஆக்கிரமிப்பாளரான சியோனிச அரசின் பிரதமர் நெதன்யாஹூ அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார், அப்போது அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.
விமர்சனம்:
திறந்தவெளி சிறைச்சாலையாகவும் மரண முகாமாகவும் மாறியுள்ள காஸாவில் வாழ்வதற்கு எந்தவொரு ஆதாரமுமன்றி அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக இந்த சியோனிச அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக படுகொலைகளையும், அட்டூழியங்களையும், இனப்படுகொலைகளையும், அழிவுகளையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்து வருகிறது.
இந்நேரத்தில், ஒரு சில முஜாஹிதீன்களும் காஸாவின் மக்களும் வெளிக்காட்டிய வீரமிகு எதிர்ப்பின் மூலம் ஒருகாலத்திலும் இந்த சியோனிச நாட்டை வெல்லவே முடியாது எனும் கூற்று வெறும் கட்டுக்கதைகளே என்பதையும் அவை பலவீனமானது என்பதையும் மற்றும் இந்த சியோனிச நாடு மிகவும் பலவீனமானது என்பதையும் மனிதகுலம் கண்டு கொண்டது.
உலகம் முழுவதிலும் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள் இந்த சியோனிச அரசைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சியோனிச அமைப்பு, அதை ஆதரிக்கும் மேற்கத்திய காலனித்துவ நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் ஆகியோரது முகமூடிகள் அவிழ்க்ப்பட்டன.
யூதர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் பரப்பி வந்த கருத்து முறியடிக்கப்பட்டதால், ஆண்டி செமிடிஸம் எனும் யூதர்களுக்கு எதிரான உணர்வும் அவர்கள் மீதான எதிர்ப்பும் உருவாவதற்கு காரணமான சியோனிச நாடு தான் இன்றைய உலகின் மிகக்கொடிய தீமை எனும் ஒரு புதியதொரு பொதுக் கருத்து உருவானது.
அமெரிக்காவின் தலைமையில் இயங்கிவரும் உலக ஒழுங்கு, சர்வதேச அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் மற்றும் காலனிய மேற்கத்திய நாகரிகத்தின் மதிப்புகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படத் தொடங்கின.
காலனித்துவ மேற்குலகின் ஆதரவு பலமாக இருந்தபோதிலும், இந்த சியோனிச அமைப்பு காஸாவில் தனது இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்தது.
இந்த சியோனிச நாட்டுக்கும் நெதன்யாஹூவுக்கும் எதிரான அழுத்தம் உள்நாட்டிலும் வெளியிலும் அதிகரித்து வருகிறது.
இவ்வனைத்திற்கும் மத்தியில், தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், யூத அமைப்பின் எதிர்காலம் மற்றும் காலனித்துவ மேற்கின் ஆதரவு கேள்விக்குரியாக மாறியுள்ள நிலையிலும் நெதன்யாஹூ தனக்கான ஒப்புதலை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உலகின் மிகவும் வெறுக்கத்தக்கவராகவும் மிகப்பெரிய பொய்யராகவும் கருதப்படுகிற இவர் ஆற்றிய உரை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
அவர் தனது உரையில், “இஸ்ரேல் மேற்கத்திய நாகரிகத்தை பாதுகாக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல் உங்களையும் உங்கள் நாகரிகத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது, எங்களுடைய போர் உங்களுடைய போர் ஆகும், எங்களுடைய வெற்றி உங்களுடைய வெற்றி ஆகும்” என்று கூறி, முஸ்லிம்களிடமிருந்து அபகரித்து உருவாக்கப்பட்ட சியோனிச நாட்டை அமெரிக்காவுடன் இணைத்து குறிப்பிட்டார்.
இந்த உரை காஸாவின் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் போர் தொடரும் என்பதை உறுதிபடுத்துவதாகவும், அதை விரிவுபடுத்துவதற்கான ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இருந்தது.
அபகரிப்பு செய்துள்ள சியோனிச நாடு மிகவும் சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு இராணுவத்தைக் கொண்டு, இறைவிசுவாசம் கொண்டுள்ள ஒரு சில முஜாஹிதீன்களிடம் தோல்வியடைந்துள்ளது என்பதையும் அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் அதனால் இந்தப் போரை நடத்த முடியாது என்பதையும் இந்த உரை உறுதிப்படுத்துகிறது.
இனப்படுகொலையை செய்து வரும் ஒரு போர்க்குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியதும், அதற்கு பலத்த கரவொலி எழுப்பப்பட்டதும், பாலஸ்தீனத்தில் சியோனிச நாடு நடத்திய இனப்படுகொலையை அமெரிக்கா கொண்டாடியதாக மனிதர்களுடைய கூட்டு மனசாட்சியை பல நூற்றாண்டுகளுக்கு உறுத்திக் கோண்டிருக்கும்.
அமெரிக்கா, சியோனிச நாட்டின் இருப்பை பாதுகாப்பதற்கும் அதை ஆதரிப்பதற்குமாந விலையாக அதை உலகத்திற்கு தலைமை தாங்கச் செய்த மற்றும் அமெரிக்கா இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டுச் சென்ற விழுமியங்களை காலில் போட்டு மிதித்து அவற்றை கைவிட்டுள்ளது என்பது இனிமேலும் அது உலகை வழிநடத்தும் தகுதியை இழந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நாகரிகங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த விழுமியங்களிலிருந்து விலகிச் செல்வது என்பது அந்த நாகரிகங்களின் வீழ்ச்சி உடனடியாக ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கின்றது.
அமெரிக்காவால் வழிநடத்தப்படும் காலனிய குஃப்பாரிய மேற்கத்திய நாகரிகம் தனக்குத் தானே குழியைத் தோண்டிக் கொண்டிருக்கின்றது, அப்படியிருக்க இந்த உலகும் மனிதகுலமும் இஸ்லாமிய எழுச்சியை மீண்டும் காணும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
- ரெம்சி ஓசெர்.