கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ்பெறுவதற்கான மூலக் காரணம் என்ன? 

بسم الله الرحمن الرحيم

கற்பழிப்பு சம்பவங்களானது பெரும் கவலையை அளிக்கும் அளவுக்கு பெருகி வரும் மிகப்பெரியதொரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. துரதிருஷ்டவசமாக, ஒரு சில நேரங்களில் மிகக் கொடூரமான முறையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்பெறும் போது மட்டுமே இது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதுபோன்ற சமயங்களில் மட்டுமே இது சமூக ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் கடுமையாக விவாதிக்கப்படுகிறது, அப்போது ஏற்படுகிற அழுத்தத்தின் காரணமாக அரசாங்க அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அந்த சம்பவத்தைக் குறித்து ஒரு சில அறிக்கைகளை வெளியிடுவது வழக்கமாக இருக்கின்றது. எனினும், இது குறித்தான விவாதங்கள் சற்று தணிந்தவுடன், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்காததைப் போலவே அரசாங்கம் இப்பிரச்சினையை முற்றிலும் மறந்துவிடுகிறது. கற்பழிப்பு பிரச்சனையானது ஏதோ ஒரு நாட்டை மட்டுமே பாதிக்கும் பிரச்சனையாக இருக்கவில்லை, மாறாக அது இன்று முழு உலகையுமே பாதித்து வரும் பிரச்சனையாக இருக்கின்றது. இது எந்தளவிற்கு மோசமாக வியாபித்துள்ளது என்பதை பின்வரும் தரவுகளின் மூலமாக நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்:  

  1. 7% உலகளவில் 2000 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 15 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் 6% பெண்கள் பாலியல் வல்லுணர்வு குற்றத்திற்கு ஆளாகியுள்ளதாக ஐநாவின் தரவுகள் தெரிவக்கின்றன. 
  1. அமெரிக்காவின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக செயல்படும் மிகப்பெரிய அமைப்பான RAINN எனும் கூட்டமைப்பின் கூற்றுப்படி, ஆறு பெண்களில் ஒருவரும், முப்பத்தி மூன்று ஆண்களில் ஒருவரும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் இது மிகவும் மோசமடைந்து கொண்டே வருகிறது என்றும் அது கூறுகிறது. 
  1. இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் மட்டும்  31,516 கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்தப்பட்டுள்ளதாக அதாவது 16 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
  1. பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி மற்றும் துனீசியா போன்ற முஸ்லிம் நாடுகளிலும் இந்தக் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 
  1. தி நியூஸ் இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, 2014 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பெரு நகரங்களில் கற்பழிப்பு குற்றங்கள் வேகமாக அதிகரித்துள்ளன. 

சமூகத்தில் செல்வாக்குடைய ஒரு சில மக்கள், கற்பழிப்பு சம்பவங்களானது ஆண்களுக்கு சரிநிகராக பெண்களை கருதாத ஒரு ஆணாதிக்க சிந்தனையைக் கொண்ட சமூகமாக இருப்பதன் காரணமாகவே நிகழ்பெறுகிறது என்று நம்புகின்றனர். அத்தகைய சமூகமானது பெண்கள் தமக்கு அடிபணிய வேண்டும் என்று கருதும் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் விரக்தியடைந்த ஆண்களை உருவாக்குகிறது என்று அவர்கள் இதற்கு காரணமாக கூறுகிறார்கள். எனவே அத்தகைய ஆண்கள் தங்களுடைய பாலியல் இச்சையை திருப்தி படுத்துவதற்காக வேண்டி பெண்களை தாம் விரும்பியபடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்  என நினைக்கின்றனர். இவ்வாறாக, இவர்கள், அந்த சமூகத்தில் நிர்வாணம் அதிகரித்திருப்பதற்கும், மக்கள் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களை  உள்வாங்கியதற்கும் கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்பெறுவதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதாக நம்புகின்றனர். உண்மையில், இந்தக் கூட்டத்தினர் ஆண் பெண் இருவரும் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்கள் விரும்புகின்ற வழியில் தங்களுக்கிடையே இணக்கமான உறவுகளை தாராளமாக  ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். எனவே, அவர்கள் நிர்வாணமாக திரிவதையும்  அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு அதனுடைய ஆடைகளை அணிகின்ற பெண்களை விமர்சிக்கும் நபர்களை கற்பழிப்புக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். 

எனினும், இந்த கூற்றுக்களை தீவிரமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அவை ஆழமற்றதாக இருக்கின்றன என்பதையும், அவை இந்த பிரச்சனையின் முழு யதார்த்தத்தைப் பற்றி பேசவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன. மேலும், அவர்களுடைய இந்த கூற்றுக்களானது தாராளவாதம் எனும் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டு சமூகத்தைக் காண்கிற மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால் வெளிப்படுவதாக இருக்கின்றன. 

சமூகத்தில் கற்பழிப்பு மற்றும் இன்னபிற குற்றங்கள் நிகழ்பெறுவதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு, ஒருவர் அதுபற்றிய சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும், அதாவது, முதலாவதாக இறைவன் என்னென்ன இயல்புகளைக் கொண்டு மனிதனை படைத்துள்ளான் என்பதைப் பற்றியும், இரண்டாவதாக, சமூகங்கள் உருவாகின்ற விதத்தைப் பற்றியுமான சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) ஆண்கள் பெண்கள் என மனிதர்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டு படைத்துள்ளான், மேலும் மனித இனத்தை நிலைத்திருப்பதற்கு இவ்விரு பாலினத்தவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்வதையும் இவ்விருவரும் ஒன்று கலப்பதையும் அடிப்படையாக ஆக்கியுள்ளான். ஆண்களும் பெண்களும் மனித குலத்தைச் சார்ந்தவர்களே, எனவே, அவர்களை மனிதர்களாக வகைப்படுத்துகிற  பண்புகள் அனைத்தையும் அவர்கள் இருவரும் கொண்டிருக்கின்றனர். அவற்றில் ஒன்று, ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கும் திறனைக் கொண்டுள்ளான் என்பதும், அவனுடைய சிந்தனைகள் தான் அவனுடைய செயல்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன என்பதும். மேலும், மனிதர்கள் கொண்டிருக்கும் மற்றொரு பண்பு என்னவென்றால், மனிதர்கள் அனைவரும் அவர்கள் உயிர் வாழத் தேவையான (organic needs) இயற்கைத்(உயிரியல்) தேவைகளை உடையவர்களாக படைக்கப்பட்டுள்ளனர் என்பது தான், அதாவது அவர்கள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவு மற்றும் தண்ணீரின் தேவையுடையவர்களாகவும், அவர்கள் சுவாசிப்பதற்காக காற்றின்  தேவையுடையவர்களாகவும் மற்றும் தனது உடம்பிற்குள் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கான தேவையுடையவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கைத் தேவைகளைத் தவிர, மனிதர்கள் சில உள்ளார்ந்த உள்ளுணர்வுகளைக் (Instincts) கொண்டும் படைக்கப்பட்டுள்ளனர், அந்த உள்ளுணர்வுகளை அவர்கள் நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் அது அவர்களிடத்தில் ஒருவிதமான பதட்டத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும், அந்த உள்ளுணர்வுகளில் ஒன்று தான் இனப்பெருக்க உள்ளுணர்வு என்பது. மனித இயல்புகளைப் பற்றி மேலே குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக்கருத்தும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லாத அளவுக்கு திட்டவட்டமானவை.  

அல்லாஹ்(சுபு) தான் மனிதர்களுக்குள் இந்த உள்ளுணர்வுகளை ஏற்ப்படுத்தியவன். மேலும், இந்த உள்ளுணர்வுகளை பூர்த்தி செய்வதற்கான சரியான வழிமுறைகளையும் அவன்(சுபு) மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். எனவே அல்லாஹ் (சுபு) மனிதர்களுக்குள் உள்ளுணர்வுகளை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை, அவற்றுடன் சேர்த்து அவற்றை திருப்திபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நமக்கு வழங்கியுள்ளான். மேலும், அல்லாஹ்(சுபு) உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு(Survival Instinct) அல்லது இனப்பெருக்க உள்ளுணர்வு(Procreation Instinct) அல்லது ஆன்மீக உள்ளுணர்வு(Reverence Instinct) ஆகிய மனிதர்களுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகளை சரியான முறையில் திருப்திபடுத்திக் கொள்வதற்கான சட்ட விதிமுறைகளைக் கொண்டும் நமக்கு வழிகாட்டியுள்ளான். மனிதன் தனது உள்ளுணர்வுகளை திருப்திசெய்வதற்காக அதற்கு முன்பு பயன்படுத்தி்வந்த பழைய வழிமுறைகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, ஒவ்வொரு மனிதரும் தமக்குள் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வை கொண்டிருப்பார்கள், அந்த உள்ளுணர்வானது வாழ்க்கையில் தமக்கான சுகத்தை  அடைந்துகொள்வதற்கு அவர்களை உந்துகிறது, அந்த சுகத்தை அடைவதற்காக வேண்டியே ஒருவர் பணத்தை சம்பாதிக்கிறார், பின்னர் அதைக் கொண்டு அவர் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைப்படும் விஷயங்களையும் ஆடம்பரமாக வாழ்வதற்கு தேவைப்படும் விஷயங்களையும் வாங்கிக் கொள்கிறார். இருப்பினும், ஒருவருடைய உள்ளுணர்வை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி திருடுவது, சூறையாடுவது, பதுக்கல் செய்வது, கடத்தல் செய்வது அல்லது போதைப்பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தவொரு காரியத்தையும் செய்து எப்படி வேண்டுமானாலும் பணத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, எவராலும் அப்படி செய்ய முடியாது அல்லவா. பிறகு ஏன் இனப்பெருக்க உள்ளுணர்வின் விஷயத்தில் மட்டும் இத்தகையதொரு பார்வை நிலவுகிறது, அதாவது உடன் பிறந்தவர்களுடன் அல்லது மிருகங்களுடன் உடலுறவு கொள்வது உட்பட தங்களுடைய பாலியல் இச்சைகளை தமது விருப்பத்தின்படி எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் எனும் பார்வை மட்டும் ஏன் நிலவுகிறது?  

அப்படியென்றால் யதார்த்தமாக நமக்கு எழும் கேள்வி என்னவென்றால்: மனிதனுடைய உள்ளுணர்வுகளை திருப்திபடுத்துவதற்கான சரியான வழிமுறைகள் என்னென்னவென்று முடிவு செய்வதற்கான அளவுகோல் என்னவாக இருக்க வேண்டும்? அது ஒரே பாலினத்தைச் சேர்ந்த அல்லது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு, திருமண பந்தத்திற்கு வெளியே ஒருவருக்கொருவர் பணம் செலுத்தியோ அல்லது திருமணம் செய்துகொள்ளாமலேயே வெறுமனே துணைகளாக வாழ்ந்து அவர்கள் விரும்புகின்ற வழியில் அவர்களுடைய இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை அளவுகோலாக வைக்கலாமா? இந்தக் கேள்விக்கு, தாராளவாத மேற்கத்திய சிந்தனையைப் பின்பற்றுபவர்கள் சத்தமிட்டு ஆம் என்றே பதிலிளிப்பார்கள். எனினும், இந்த வாதத்தின் அடிப்படையில், ஒருவர் தன்னுடைய குழந்தைகளுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தேவைப்படும் பணத்திற்கு பகரமாக ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவதை யாராலும் அனுமதிக்க முடியுமா? சுதந்திரம் எனும் பெயரில், இரு வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள், பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பாலியல் உறவை வைத்துக் கொள்வதற்காக வேண்டி அவரவருடைய நாடுகளின் முக்கிய இரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதை யாராலும் அனுமதிக்க முடியுமா? 

எனவே, ஒருவர் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்கு சில வகையான அளவுகோல்கள் நமக்கு தேவைப்படுகின்றன. அப்படியானால் அது குறித்து எழுகின்ற அடுத்த கேள்வி என்னவென்றால்: அந்த அளவுகோலை தீர்மானிக்கின்ற அதிகாரம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்? ஒருவேளை மனிதர்கள் அனைவரையும் படைத்த படைப்பாளன் என்று ஒருவன் உண்மையிலேயே இருப்பானேயானால், அந்த அளவுகோலை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை அவனுக்கு வழங்கலாமா? என்பது தான். 

மனிதர்கள் இயற்கைத் தேவைகளையும் உள்ளுணர்வுகளையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளதாக நாம் மேலே குறிப்பிட்டிருந்தோம். இவ்விரு விஷயங்களையும் நாம் உண்ணிப்பாக கவனிக்கும் போது, மனிதனுக்கு ஏற்படும் இயற்கைத்(உயிரியல்) தேவைகளின் விஷயத்தைப் பொருத்தவரை அவை ஏற்படுவதற்கு வெளிப்புறத்திலிருந்து எந்தவிதமான தூண்டுதலும் தேவையில்லை என்பதை நம்மால் உணரமுடியும். உதாரணமாக, மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு சில நேரங்களில் பசி ஏற்படும், அது அவர்களுக்கு முன்பாக நல்லதொரு உணவு வைக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது வைக்கப்படாவிட்டாலும் சரி பசி என்பது தானாகவே அவர்களிடத்தில் ஏற்பட்டு விடும். மாறாக, உள்ளுணர்வுகளானது மனிதர்களிடத்தில் ஏற்படுவதற்கு வெளிப்புறத்திலிருந்து அதுதொடர்பான ஏதாவது ஒன்று அவர்களைத் தூண்டுவது அவசியமாக இருக்கின்றது. எனினும், அவர்களிடத்தில் இந்த உள்ளுணர்வுகள் ஏற்பட்டு அவை திருப்திபடுத்தப்படாத போது, அந்த நபர் அமைதியற்ற நிலையிலோ அல்லது அதிருப்தியடைந்த நிலையிலோ இருப்பதை நம்மால் காணமுடியும். உதாரணத்திற்கு, குழந்தைப்பேறு இல்லாத ஒருவர் ஒரு தாய் தனது குழந்தையை கவனித்துக் கொண்டிருப்பதைக் காணும் பொழுது அவருடைய உணர்ச்சிகள் தூண்டப்படும் அதாவது அவருக்கு கவலை ஏற்படும்.  எனினும், அந்தத் தாயும் குழந்தையும் அவருக்கு முன்பாக இல்லாதபோது அவருக்கு ஏற்பட்ட அந்த உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து விடும். இருப்பினும், குழந்தை இல்லாத அந்த நபர் தனது வாழ்வில் இத்தகையதொரு குறை இருப்பதை நினைக்கும் போதெல்லாம் அமைதியற்றவராகவே காணப்படுவார். இதுவே இனப்பெருக்க உள்ளுணர்விலும் ஏற்படுகிறது, ஒரு நபர் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்திலான விஷயங்களை காணும் போது  அவருடைய இனப்பெருக்க உள்ளுணர்வானது தூண்டப்படுகிறது, அதை அவர் நேரடியாக கண்டாலும் சரி அல்லது அத்தகைய யதார்த்தம் அவருடைய சிந்தனையின் உதித்தாலும் சரி அந்த உணர்வானது அவருக்கு ஏற்படுகிறது.  

மனித இயல்பின் மற்றொரு அம்சம் என்னவென்றால், மனிதர்களிடத்தில் அவர்களுடைய நாட்டங்களையும் உணர்வுகளையும் வடிவமைப்பதில் வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களும் கண்ணோட்டங்களும் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளது என்பது தான். உதாரணமாக, ஒரு முஸ்லிம் தனது தாயின் மீதோ அல்லது தனது சகோதரிகளின் மீதோ பாலியல் ரீதியிலான நாட்டங்களைக் கொண்டிருக்க மாட்டான், ஏனெனில் இஸ்லாமிய மார்க்கமும் இஸ்லாமிய சமூகமும் இந்த உறவுகளை புனிதமாக கருதுகின்றன. இவ்வாறிருக்க, மேற்குலகத்திலோ, சர்வசாதாரணமாக உடன் பிறந்தவர்களுடன் பாலியல் உறவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பாலியல் விஷயத்தில் மனிதர்களிடத்தில் சரியான மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால், சமூகத்தில் அதுகுறித்தான சரியான எண்ணங்களை பரப்பி அங்கு அவற்றை நிறுவ வேண்டியது அவசியமாகிறது. அதற்கு பதிலாக, மனிதர்கள் அனைவரும் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் சுதந்திரமாக செயல்படலாம் என்று கூறுவது என்பது அவர்களிடத்தில் தமது உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் பூர்த்தி செய்து கொள்ளலாம் எனும் மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது, அதாவது எதிர்பாலினத்தவரின் மீது வலுக்கட்டாயமாகவும் மற்றும் வன்முறையை பிரயோகித்தும் கூட தங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் எனும் மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.  

மேற்குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில், இப்போது கற்பழிப்பு பிரச்சினையை சற்று உண்ணிப்பாக பார்ப்போம். கற்பழிப்புக் குற்றங்கள் மூன்று காரணிகளின் விளைவுகளால் நிகழ்பெறுகின்றன:  

  1. ஒருவரிடத்தில் தனது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நாட்டம் ஏற்படும் போது இவை நிகழ்பெறுகின்றன. 
  1. கற்பழிக்கின்ற நபரிடத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தான சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் போதும் அல்லது இந்த புரிதல் இருந்தும் அதைவிட தன்னுடைய இச்சைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போதும் இவை நிகழ்பெறுகின்றன. 
  1. ஒருவர் தனக்கு அருகில் இருக்கும் ஒரு ஆணின் மீதோ அல்லது பெண்ணின் மீதோ உடலளவில் அத்துமீறுவதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்குமான ஆற்றலை  அல்லது வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் போதும் இவை நிகழ்பெறுகின்றன.  

நாம் மேலே குறிப்பிட்ட இந்த மூன்று காரணிகளும் ஒருசேர அமையும் போது ஒரு நபர் கற்பழிப்பு என்னும் கொடூரமான குற்றத்தை புரிகிறார். தாராளவாத கோட்பாடானது தான் இந்த மூன்று காரணிகளையும் ஊக்குவிக்கவில்லை என்று வாயளவில் கூறினாலும் அதன் செயலளவில் இவற்றையே அது ஊக்குவித்து வருகிறது. மாறாக இஸ்லாமிய சமூக அமைப்பானது அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல்மிகு வழிவகைகளை  வழங்குகிறது. ஆகவே தான், இஸ்லாமை முழுமையாக தழுவிக் கொண்ட ஒரு சமூகத்தில் கற்பழிப்பு சம்பவங்களானது மிகவும் அரிதாகவே நிகழ்பெறுவதாக இருக்கின்றது. 

முதல் காரணியைப் பொருத்தவரை, இஸ்லாம் ஒரு நபரின் இனப்பெருக்க(அல்லது பாலியல்) உள்ளுணர்வை தூண்டக்கூடிய வெளிப்புற சூழல்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும் எனக் கூறுகிறது. எனவே, இஸ்லாம் தனது சமூகத்தில் ஆபாசத்தை வெளிப்படுத்துகிற எந்தவொரு விஷயத்தையும் பொதுவெளியில் சித்தரிப்பதை அனுமதிக்காது, அதேபோல் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக வேண்டி விளம்பரப் பலகைகளில் பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதையும் அனுமதிக்காது. அதேபோல், இஸ்லாம் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்று எந்தவொரு நிகழ்ச்சியிலும் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் மேடைகளில் அணிவகுத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்காது. அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில், ஆண்களும் பெண்களும் இஸ்லாமிய ஆடை நெறிமுறைக்கு பொருந்துகிற வகையிலான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் இஸ்லாம் நிர்ணயித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டே ஒருவருக்கொருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இது உலகம் முழுவதிலும் பெரும்பாலான மக்களிடத்தில் இப்போது காணப்படுகிற பாலியல் ரீதியிலான ஏக்கம் ஏற்படுவதிலி்ருந்து சமூகத்தைப் பாதுகாக்கிறது.  

இருந்தபோதிலும், இதை வைத்துக்கொண்டு இஸ்லாம் மனிதர்களுக்கு இனப்பெருக்க உள்ளுணர்வு என்பது இருக்கவே கூடாது என்று கூறுகிறது என்றோ அல்லது அதை ஒடுக்குகிறது என்றோ அர்த்தமல்ல. மாறாக, இஸ்லாம் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன்  விரைவாக திருமணம் செய்து கொள்வதை  ஊக்குவிக்கிறது, இதன் மூலமாக அவர்கள் விரைவிலேயே தங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று அது கூறுகிறது. இதன்மூலம் அது மக்களை விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற ஒழுக்கக்கேடான முறைகளில் தங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதிலிருந்து தடுக்கிறது. அல்லாஹ் (சுபு) தனது புனித குர்’ஆனில் கூறுகிறான்.وَمِنْ آَيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” [அல்குர்ஆன் : 30:21]. முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ منكُم الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” (புஹாரி, முஸ்லிம்). 

இரண்டாவது காரணியைப் பொருத்தவரை, இஸ்லாமிய சமூகத்திற்குள் இயங்கும் கல்வியமைப்பும் அதன் ஊடகங்களும் ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில்  மனிதர்களுடைய உள்ளுணர்வுகள் மற்றும் இயற்கைத் தேவைகளைப் பற்றிய சரியான கருத்தாக்கங்களை வளர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். எனவே, ஒரு இஸ்லாமிய சமூகத்தில், பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும், அவர்களுடைய கண்ணியம் பாதுகாக்கப்படுவது அந்த சமூகத்தின் ஜீவாதார பிரச்சனை என்பதாகவும் பார்க்கப்படும். ஒரு பெண் என்பவள் அவள் கொண்டிருக்கும் பாலியல் பண்புகளையும், கவர்ச்சியையும் விளம்பரத்திற்காக சுரண்டி அவளை ஒரு காட்சிப்பொருளாக்குவதை விட, அவளை ஒரு தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் மற்றும் சகோதரியாகவும் பாவித்து மதிக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். அதேபோல் இஸ்லாம் ஓரினச்சேர்க்கையையும் தடைசெய்துள்ளது. அந்தச் செயலை மரண தண்டனை விதிப்பதற்கு தகுதியான ஒரு அருவருக்கத்தக்க குற்றமாக அது கருதுகிறது, மேலும், இந்த செயலானது முந்தய  காலத்தில் ஓட்டுமொத்த சமூகத்தின் மீது அல்லாஹ் (சுபு) வின் கோபப் பார்வையை கொண்டு வந்து அந்த சமூகம் அழிவதற்கான காரணமாகவும் இருந்தது. அல்லாஹ்(சுபு) அல்- குர்ஆனில் கூறுகிறான்; يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்.” [அல்குர்ஆன் : 4:1] முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள், «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي» “உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! உங்கள் அனைவரையும் விட என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்.” (நூல்: திர்மிதி). 

மூன்றாவது காரணியைப் பொருத்தவரை, இஸ்லாம் தவறான எண்ணத்தை கொண்ட நபர் ஒருவருக்கு அவரால் பாதிக்கப்படக்கூடிய நபரை அடைவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, இஸ்லாம் மஹரமல்லாத(திருமணம் செய்வதற்குத் தடையில்லாத) ஆண்களும் பெண்களும் தனிமையில் ஒன்றாக இருப்பதை தடை செய்கிறது, அதாவது  வெறிச்சோடிய சாலையில் பயணம் மேற்கொள்ளும் போதும், வீட்டிற்குள் மஹரமான(திருமணம் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட) உறவினர்கள் இல்லாத சமயத்திலும், அல்லது பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது அலுவலகங்களில் பணிபுரியும் சமயங்களிலும் இரு பாலினத்தவரும் தனிமையில் ஒன்றாக இருப்பதை தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய ஒரு உரையில் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது, «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بامْرَأَةٍ إلَّا وَمعهَا ذُو مَحْرَمٍ» “ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர” (முஸ்லிம்). அதேபோல் நபி ஸல் கூறினார்கள், «لا يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ باللَّهِ وَالْيَومِ الآخِرِ، تُسَافِرُ مَسِيرَةَ يَومٍ وَلَيْلَةٍ إلَّا مع ذِي مَحْرَمٍ عَلَيْهَا» “அல்லாஹ்வையும்மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருபெண் தன்னுடைய (திருமணம் செய்ய) தடை செய்யப்பட்டவர் துணை இல்லாமல் ஒரு பகல் ஒரு  இரவு கால அளவுக்கு (தனியாக)ப் பயணம் செய்திட  அனுமதி கிடையாது” (புஹாரி, முஸ்லிம்). 

மேலும், இஸ்லாம் ஷரீஆ விதித்துள்ள முறையான காரணங்களைத் தவிர வேறு எந்தவொரு  காரணத்திற்காகவும் ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவதை  தடைசெய்துள்ளது. ஆகவே, மஹரமல்லாத(திருமணம் செய்ய தடைசெய்யப்படாத) ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி அல்லது வணிக நோக்கங்களுக்காக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் அவர்கள் வெறுமனே இன்பமாக பொழுதை கழிப்பதற்காகவோ அல்லது பொழுதுபோக்கு விஷயங்களுக்காகவோ ஒன்று கூடுவதை அது அனுமதிக்கவில்லை. 

மேற்கத்திய தாராளவாத சிந்தனையை தழிவிக்கொண்டவர்கள் கற்பழிப்பு குற்றங்கள் நடைபெறுவதற்கு வழிவகுக்கும் முதல் இரண்டு காரணிகளையும் சரிசெய்வதற்கு முயற்சிக்காமல், அதற்கு பதிலாக அவர்கள் அதனுடைய மூன்றாவது காரணியை மட்டுமே சரிசெய்வதற்கு முயற்சித்து வருகின்றனர். மேலும், அவர்கள் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்மொழியும் தீர்வுகளானது குடும்பத்தை குறித்து இஸ்லாம் கொண்டுள்ள கருத்தாக்கங்களுடன் முரண்படுகின்றன. மேலும் அவர்கள் பெண்களுக்கு தாராளவாதம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக வலுவாக குரல்களை எழுப்பும் வகையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் அமைப்புகளை உருவாக்கி  பெண்களை ‘அதிகாரப்படுத்துவது’ தான் இந்த பிரச்சினைக்கான தீர்வு என்று வாதிடுகின்றனர்.  ஆனால், அவர்கள் இஸ்லாமிய சமூக அமைப்பு பரிந்துரைக்கின்ற உரிமைகளையும் கடமைகளையும் எதிர்க்கின்றனர். இவ்வாறு, இத்தகைய தாராளவாத சிந்தனையாளர்கள், ஒரு பாதி மக்களை மற்றொரு பாதி மக்களுக்கு எதிராக நிறுத்தி ஏற்கனவே மேற்கத்திய சமூகத்தை  அழித்தது போன்று இன்று மற்ற சமூகங்களையும் அழிக்க முயற்சிக்கின்றனர். பல பெண்ணிய இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதிலும், மேற்கத்திய சமூகங்கள் இன்னமும் கற்பழிப்புக் கேந்திரங்களாக திகழ்கின்றன. ஆணாதிக்கம் குறைந்து விட்டது என்று கூறப்பட்டாலும், உலகளவில் கடந்த சில தசாப்தங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என்பதையும் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும்,  

கற்பழிப்பு என்பது ஒருவிதமான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற ஒரு மனரீதியான நோயுமல்ல, அதேபோல் அது ஒருவர் மற்றவரை ஒடுக்குவதற்கும் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதற்குமான மனப்பாங்கை கொண்டிருப்பதன் காரணமாக நிகழ்த்தப்படுவதுமில்லை. மாறாக,  அது சமூகத்தை குறித்து மக்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள், சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மற்றும்  இறையச்சமற்ற மற்றும் இறைவன் விரும்புகிற ஆளுமைகளை வளர்ப்பதற்கான தமது கடமையை   புறக்கணித்த ஆட்சியாளர்கள் ஆகியவற்றின் விளைவாகவே நிகழ்பெறுகின்றன. ஒருவர் தனது பாலியல் தேவைகளை ஒருமுறை தவறான வழிமுறைகளில்  பூர்த்தி செய்துவிட்டால், பிறகு அவர் அந்த பாதையையே தொடர்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். 

அதேபோல் இஸ்லாமிய ஆடை நெறிமுறையை பின்பற்றாத காரணத்தினால் தான் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர் என்று கூறுவதும் தவறானது, ஏனெனில்  இஸ்லாமிய ஆடை நெறிமுறைகளை  பின்பற்றுகின்ற பெண்களும் கற்பழிக்கப்படுகின்றனர். எனினும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் சரியான இஸ்லாமிய ஆடை நெறிமுறையை கடைப்பிடிக்கத் தேவையில்லை எனும் வாய்ப்பை வழங்குவதே இன்று சவூதி அரேபியா உட்பட முஸ்லிம் உலகின் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. இவ்வாறாக, நோய்வாய்ப்பட்ட எண்ணத்தை கொண்ட இந்த மக்கள் இஸ்லாமிய நெறிமுறையின் படி ஆடையை உடுத்திய பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கற்பழிப்பு சம்பவங்களை கோடிட்டு இந்த விஷயம் குறித்து அதாவது சமூகத்தில் ஆண்களும் பெண்களும் பேண வேண்டிய விஷயத்தில் இஸ்லாம் தெளிவாக விதித்துள்ள தடை உத்தரவுகளை தாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இஸ்லாம் விதித்துள்ள தடையுத்தரவுகளை நடைமுறைபடுத்துவதன் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சனையை  சரிசெய்ய முடியாது என்பது தான். எனவே, பெண்களின் மீது இஸ்லாமிய ஆடை நெறிமுறைகளை அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே அல்லது அத்தகைய குற்றங்களுக்கு வெறுமனே இஸ்லாமிய தண்டனைகளை விதிப்பதன் மூலமாக மட்டுமே கற்பழிப்பு பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. உண்மையில், தற்போது பரவலாக பெண்களை காட்சிப்பொருளாக ஆக்கியுள்ள முஸ்லிம் உலகு உட்பட எந்தவொரு தாராளவாத செயலாக்க அமைப்புகளுக்குள்ளாக இஸ்லாமிய தண்டனைகளை விதிப்பது என்பது அவர்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது எனும் தோற்றத்தையும் அவை எந்தவொரு பயனையும் அளிக்காது எனும் தோற்றத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். ஏனெனில் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்களால் மட்டுமே கற்பழிப்பு குற்றங்கள் நடைபெறுவதற்கு வழிவகுக்கும் அனைத்து காரணிகளில் இருந்தும் சமூகத்தை விடுவிக்க முடியாது, ஏனெனில் அந்தக் காரணிகளுக்கென இஸ்லாம் தனியான விதிகளை நமக்கு வழங்கியுள்ளது. எனவே, இஸ்லாமிய தண்டனைச் சட்டங்களை மட்டுமே கோருவது என்பது இந்தப் பிரச்சனையை முழுமையாக தீர்த்து வைக்க உதவாது. மாறாக, எந்த சமூகம் இந்தப் பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகிறதோ அந்தச் சமூகத்தில் மேற்கத்திய தாராளவாத முதலாளித்துவ அமைப்பு முறையானது முற்றிலுமாக அகற்றப்பட்டு அதனுடைய இடத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாமை முழுமையாக நடைமுறைபடுத்தாத வரை இந்த பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படாது. நாம் அறிந்தவரை நபித்துவ வழிமுறையிலான கிலாஃபா அரசு மட்டுமே வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாமை நடைமுறைபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. இதுவே கற்பொழுக்கமுள்ள மற்றும் நற்குணமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும், அதுவே உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *