மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் பங்குகளை பிளாக்ராக்/ஜிஐபி நிறுவனத்துக்கு விற்பனை செய்வது, மலேசியாவில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலையை வலுப்படுத்தும்

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

செய்தி: 

கடந்த ஜூன் மாதம் முதலாக, இந்த நாட்டில் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ் (ஜிஐபி)எனும் அமெரிக்க நிறுவனத்தைப் பற்றி அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவின் மற்றுமொரு நிறுவனமான பிளாக்ராக் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் மலேசிய நாட்டிலுள்ள 39 விமான நிலையங்களை நிர்வகிக்கும் அரசுக்கு சொந்தமான மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. பிளாக்ராக் நிறுவனம் சட்டவிரோத சியோனிச அரசுக்கு ஆதரவானது என அறியப்படுகிறது. இந்த நிறுவனம் சட்டவிரோத சியோனிச அரசுக்கு அனுப்பப்படுகின்ற ஆயுதங்களுக்கு நிதயுதவி செய்து வருகிறது. சியோனிச அரசுடன் அது கொண்டுள்ள உறவுகளைத் தாண்டி இந்த விஷயத்தைக் குறித்து பெரிதும் பார்க்கப்படாத அமெரிக்க புவியரசியல் கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். இந்த புவியரசியல் அம்சமானது இந்த நாட்டையும் முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்து: 

2022ல், நடைபெற்ற, G7 மாநாட்டின் போது, அமெரிக்கா சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு (BRI) போட்டியாக தனது சொந்த பொருளாதார வழித்தடத்தை உருவாக்க பார்ட்னர்ஷிப் இன் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்டு இன்வெஸ்ட்மெண்ட் (PGII) எனும் திட்டத்தை தொடக்கியது. இந்த PGII திட்டமானது, “ஒரு தாராளமயமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக்” எனும் முழக்கத்துடன், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்தப் பகுதியிலுள்ள முக்கிய உள்கட்டமைப்பில், குறிப்பாக இந்தோ-பசிபிக் நாடுகளில், சீனாவின் செல்வாக்கை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.  PGII திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்காவுக்கும் பிற G7 நாடுகளுக்கும் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்பட்டது. இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிளாக்ராக் நிறுவனமும் மைக்ரோசாப்ட்,நிறுவனமும் இந்த செயற்திட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றன. ஜூன் 13 அன்று இத்தாலியின் ஃபசானோ நகரில் நடைபெற்ற சமீபத்திய G7 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றாக G7 நாடுகள் வளரும் நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு நிறுவனங்களில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிதியில், 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் GIP, Blackrock மற்றும் Brookfield போன்ற தனியார் அமெரிக்க நிறுவனங்கள் மூலமாக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, இதற்குப் பிறகு நாம், GIP/Blackrock நிறுவனம் கார்ப்பரேட்கள் கொண்டிருக்கின்ற இலாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு முதலீட்டை செய்துள்ளதாக பார்க்கக்கூடாது, மாறாக அது முதன்மையாக புவியரசியல் தொடர்பாக அமெரிக்கா தீட்டியுள்ள  திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யபட்டிருப்பதாக பார்க்க வேண்டும். MAHBல் 30% பங்குகளை வாங்கியதைத் தவிர, GIP/BlackRock நிறுவனம் MMC போர்ட் போன்ற துறைமுக நிறுவனங்களின் பங்குகளையும் வாங்க திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் மலேசியாவில் கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 10.5 பில்லியன் மலேசிய வெள்ளிகளை முதலீடு செய்துள்ளது. இவையனைத்தும் அமெரிக்காவின் PGII திட்டம் மலேசியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதைக் குறிக்கின்றது. 

இதன்மூலம், இந்த நாட்டிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மீது அமெரிக்காவால் எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது என்பது போல் தோன்றுகிறது, அதற்கான காரணம் என்னவென்றால் முதலாளித்துவத்தின் தாராளவாத கொள்கைகள் மூலதனத்தையும் லாபத்தை ஈட்டுகிற ஆற்றலையும் கொண்டிருக்கும் எவரும் எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளையும் வாங்க முடியும் என அனுமதிக்கின்றன.  பிளாக்ராக்/ஜிஐபி போன்ற பெரும் மற்றும் கவர்ச்சிகரமான மூலதனத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மலேசியா MAHB நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு எளிதாகவே ஒப்புக் கொள்ளும். MAHBன் 30% பங்குகளுடன் அமெரிக்கா இந்த நிறுவனத்தின் போக்கை தீர்மானிக்கும் அல்லது குறைந்தபட்சம் அதன் மீது செல்வாக்கை செலுத்தும் நிலை ஏற்படும். ஷரீஆ சட்டத்தின் கீழ் இத்தகைய கார்ப்பரேட் பங்குதாரர் முறையிலான மற்றும் முஸ்லிம்களின் விஷயத்தில் அந்நிய நாடு ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தும் வகையிலான  நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது, முஸ்லிம் தலைவர்களும் அவர்களின் ‘அரசியல் விருப்பத்தில்’ பலவீனமானவர்களாகவும், தெளிவான கருத்தியல் அடிப்படையை கொண்டில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் அரசியல் அபிலாஷைகள் அனைத்தும் தேசிய நலன்களைப் பாதுகாப்தோடும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதோடும் மற்றும் வளர்ந்த நாடு எனும் அந்தஸ்தை அடையும் நோக்கத்தோடு மட்டுமே சுருக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சதித்திட்டத்தை உணர முடியாத அளவுக்கு அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கின்றனர், அதன் விளைவாக அவர்கள் அதற்கு அடிபணியத் தயாராக உள்ளனர். மேலும், மலேசியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடைபெறும் போட்டியால் தனது நாடு பயனடையக்கூடும் மற்றும் அது மலேசியாவுக்கு லாபம் தரும் எனும் நோக்கத்தில் சீனாவின் BRI திட்டமாக இருக்கட்டும் அல்லது அமெரிக்காவின் PGII திட்டமாக இருக்கட்மும் அது எந்தக் தரப்பினரின் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு ‘நடுநிலை தேசமாக’ தன்னை எப்போதும் கருதுகிறது. உண்மையில், மலேசியா கொண்டிருக்கும் இந்த நடுநிலைக் கொள்கையானது, வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் மலேசியா சிப்பாயாக பயன்படுத்தப்பட்டு வருகிது என்பதையும் புவிசார் அரசியலில் ஏற்படும் எந்தவொரு கொந்தளிப்புக்கும் பலியாவது முஸ்லிம்கள்தான் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது, மேலும் ‘முஸ்லிம் விவகாரங்களை நிர்வகிக்கும் விஷயத்தில்’ முஸ்லிம் தலைவர்கள் கொண்டுள்ள குறுகிய சிந்தனையானது முஸ்லிம் உம்மத்தின் புவிசார் அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கும். 

இந்த உம்மத்தை பொருத்தவரை, முஸ்லிம்கள் கடுமையாகப் பாடுபட்டு முஸ்லிம் உலகில் கிலாஃபத்தை மீண்டும் நிறுவி இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வல்லாதிக்க நாடுகளின் இந்தச் செல்வாக்கிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. கிலாஃபா முழு முஸ்லிம் உலகையும் ஒன்றிணைத்து, அதனுடைய இயற்கை மற்றும் மனித வளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, உலகளவில் அதன் புவிசார் அரசியல் நிலையை வலுப்படுத்தும். இன்றுள்ள முஸ்லிம் உலகு கொண்டுள்ள பலத்தை கருத்தில் கொள்வோமேயானால் அதனால் இந்த புவிசார் அரசியல் நிலையை அடைவது என்பது முடியாததல்ல. கிலாஃபா அந்நிய நாடுகளை சார்ந்திருக்காது மேலும் அது முஸ்லிம்கள் மீது அவர்களது புவிசார் மூலோபாயத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கும் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்காது. 

  • டாக்டர். முஹம்மது, மலேசியா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *