மனிதன் உருவாக்கிய ஆட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டு முறை போன்ற திட்டங்கள் ஊழலைப் பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன
بسم الله الرحمن الرحيم
செய்தி:
நாடு முழுவதும் வன்முறை வெடிப்பதற்கும், 100க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த அரசாங்க வேலைகளை பெறுவதற்காக வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடுகளில் பெரும்பாலானவற்றை வங்காளதேச உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்பும் போது 93% பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மீதமுள்ள 2% காலியிடங்களை சிறுபான்மை இனத்தவர் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியது. (Source BBC https://www.bbc.com/news/articles/c6p27g628k6o)
கருத்து:
முஸ்லிம் உலகில் ஆட்சிபுரிந்து வரும் ஆட்சியாளர்கள் அவர்கள் புரிகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை நசுக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் வங்காளதேசம் எந்தவொரு விதிவிலக்கும் அல்ல. 1971ல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற போரில் பங்கேற்ற வீரர்களின் சந்ததியினருக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என வங்காளதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜூன் 5, 2024 முதல் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. இந்த இடஒதுக்கீட்டு முறை 1972 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. பிறகு மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 2018ல் ஹசீனா அரசாங்கம் அதை ரத்து செய்தது. பிறகு ரத்து செய்யப்பட்ட அந்த இட ஒதுக்கீட்டை ஜூன் 2024ல் அதன் உயர்நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்த அனுமதித்தது.
பல்கலைக்கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய இந்த போராட்டமானது, பின்பு நாடு முழுவதிலும் அமளியை ஏற்படுத்தியது. “மாணவர்கள் மட்டும் இப்போது போராடிக் கொண்டிருக்கவில்லை, அவர்களுடன் சேர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிகிறது“ என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் சமினா லுத்பா கூறினார். பொதுமக்களின் அழுத்தத்திற்கு இணங்கிப் போவதற்குப் பதிலாக, ஹசீனாவின் அரசு பலத்தை பிரயோகித்து போராட்டத்தை ஒடுக்க முற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீகின் (BCL) உறுப்பினர்களால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டனர். இது அமைதியான முறையில் நடத்தப்பட்ட வந்த போராட்டங்களை வன்முறையாக மாற்றியது. போராட்டக்காரர்களை சிதறடிக்க அரசாங்கம் காவல்துறையை பயன்படுத்தியது. அது ரப்பர் தோட்டாக்களையும், ஒலி எழுப்பும் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களின் மீது கொடூரமான முறையில் தாக்கியது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 115க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர. ஜூலை 19 வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அரசு வேலைகளைப் பொருத்தவரை அதில் மூன்றில் ஒரு பங்கு மூத்த ராணுவ அதிகாரிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதிக்கீட்டிற்குள் பெரும்பான்மையாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா பத்து சதவீதமும். பழங்குடி சமூகங்களுக்கு 5 சதவிகிதமும் மற்றும் ஊனமுற்றோருக்கு 1 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டு முறையானது தகுதியின் அடிப்படையில் அரசு வேலைகளைப் பெறுவதிலிருந்து இதர மக்களை தடுத்து விடுகிறது. அது பதினேழு கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கியுள்ள மூன்று கோடியே இருபது லட்சம் இளைஞர்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரமாக இருந்துவந்த நிலை மாறி இன்று அது தேக்க நிலையை அடைந்துள்ளது. அங்கு பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குன்றிப்போனது, பணவீக்கம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது, மேலும் டாலரின் கையிருப்பும் குறைந்து வருகிறது. சுமார் 18 மில்லியன் வங்காளதேச இளைஞர்கள் வேலை தேடி வருவதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த அளவிலான கல்வியைக் கற்றவர்களை விட அதிகளவிலான பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதுபோன்ற இட ஒதுக்கீட்டு முறைகளானது எப்போதும் ஆளும் உயர்குடி மக்கள் பயனடைவதற்காக அதிலும் குறிப்பாக பொருளாதாரம் தேக்க நிலையை அடைகிற போதெல்லாம் அது அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன, வங்காளதேசத்தின் ஆட்சியாளர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளால் மிகமோசமாக அம்பலப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்திருக்கவே விரும்புகிறார்கள். ஹசீனா, வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவரும் மற்றும் அதன் நினுவனத் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஆவார், ஷேக் ஹசீனா தொடர்ந்து நாலாவது முறையாக ஆட்சியில் நீடித்திருப்பதற்கு பயன்படுத்திய பல கருவிகளில் இந்த இட ஒதுக்கீட்டு முறையும் ஒன்றாகும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு தேக்கமடைந்ததும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அமளிக்குஒரு காரணம், ஏனெனில், இதன் காரணமாக அங்கு தொடர்ந்து ஊதிய உயர்வையும் இன்னபிற சலுகைகளையும் பெற்றுத்தருகிற பொதுத்துறை வேலைவாய்ப்புகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
இந்த ஒதுக்கீட்டு முறையானது சகோதரர்களாக இருந்த முஸ்லிம்களை வங்காளி எனவும் பாகிஸ்தானி எனவும் ஒருவரிடமிருந்து மற்றவரை பிரித்த அழுகிப்போன தேசியவாதம் எனும் சிந்தனின் விளைவாக உருவனதாகும். முஸ்லிம் நிலங்களில் பிரிவினைக்கான இந்த விதையை பிரித்தானிய ராஜ்ஜியம் தான் முதலில் விதைத்தது. ஏனென்றால், ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு சமூகத்தை அடக்கி ஒடுக்கும் கொடூரமான தந்திரத்தை பயன்படுத்தினர். இதன் விளைவாக, எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகமும் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறும்போது குறிப்பாக காலனித்துவ ஆளுமையின் கீழ் அதற்கான வாய்ப்பைப் பெறும்போது அது எழுச்சி பெறுவதற்கான பாதை எதுவாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதனடிப்படையில் தான் வங்காளத்தின் நவாப் சிராஜுத் தௌலா, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தமது எதிர்ப்பை விதைத்தார். அவரது இராணுவத்தில் இருந்த துரோகிகளின் சூழ்ச்சிகளால், ஆங்கிலேயர்கள் அவரை ஷஹீத் ஆக்கி அவரது படையைத் தோற்கடித்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பிரித்தானியா வங்காளிகளை அரசின் உயர் பதவிகளையோ அல்லது இராணுவத்தின் உயர் பதவிகளையோ அடைவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை, இத்துணைக்கண்டத்தை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும், பிரித்தானியாவின் ஆதிக்கம் நீடிக்கவே செய்தது, மேலும் பாகிஸ்தானில் உள்ள காலனித்துவ கைப்பாவைகளின் மூலமாக அதன்மீதான வெறுப்புணர்வு தூண்டப்பட்டது. இனவெறியின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வந்த பிறகு, வங்காளதேசத்தின் ஆட்சியாளர்கள் இந்த வெறுப்புணர்வை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாயினர். இந்த வெறுப்புணர்வு தான் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வரத் தூண்டியது, அதை வங்காளதேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளரும் தமது ஆட்சியைப் பாதுகாக்க தவறாமல் பயன்படுத்திக் கொண்டனர்.
இஸ்லாம் இதற்கு நேர்மாறானது, அது ஒரு ஆட்சியாளர் அவருடைய ஆட்சியை நீடிக்கச் செய்வதற்கு இத்தகைய பாரபட்சமான, சுயவிருப்பமான அதிகாரங்களை கொண்டிருப்பதை அனுமதிப்பதில்லை. ஒருசில நேரங்களில் அது குறிப்பிட்ட சில நபர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தாலும், அது இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு உட்பட்டும் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நலன்களுக்கு உட்பட்டு மட்டுமே அவற்றை வழங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு ஜகாத்தை எடுத்துக் கொள்வோம், முஸ்லிமல்லாதவர்களின் இதயங்களை வென்றெடுப்பதற்காக (அல்-முஅல்லஃபதூ குலுபுஹும்) அதில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது அதாவது இறைநம்பிக்கையில் இன்னும் உறுதி ஏற்படாதவர்கள், சமூகத்தின் தலைவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என இவர்களுக்கு அதில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கலீஃபாவோ அல்லது அவரது வாலிக்களோ(ஆளுநர்கள்) அவர்களுடைய உள்ளத்தை வென்றெடுப்பதற்காகவும் இஸ்லாத்தின் மற்றும் முஸ்லிம்களின் நலன்களுக்காக வேண்டியும், அவர்களுடைய சமூகத்தினரை தம் பால் ஈர்ப்பதற்காக வேண்டியும் ஜகாத்திலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்குவார்கள். இதைத்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அபூ சுஃப்யான், உயய்னா பின் ஹிஸ்ன், அல்-அக்ரா பின் ஹாபிஸ், அப்பாஸ் பின் மிர்தாஸ் மற்றும் பலரிடத்தில் செய்தார்கள். அம்ரு பின் தக்லிப் கூறினார்கள்:
“கைதிகளடமிருந்து கொஞ்ச பணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது, அதை அவர்கள் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது சிலருக்கு அதிலிருந்து கொடுத்தார்கள், சிலருக்கு கொடுக்காமலும் விட்டார்கள்”
- முஹம்மது மாலிக்.